நியூசிலாந்துக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றது. நியூசிலாந்தின் வெலிங்டனில் நடந்த 3ஆவது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற இந்தியா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச முடிவு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணி சார்பில் ஃபின் ஆலன் 40 ரன்களையும், டேரில் மிட்செல் 89 ரன்களையும், பெவோன் ஜேக்கப்ஸ் 39 ரன்களையும் எடுத்தனர்.
199 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 13.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. இந்திய அணியின் அபிஷேக் ஷர்மா அபாரமாக விளையாடி சதமடித்தார் . தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அபிஷேக் 38பந்துகளில் 9 பௌண்டரிகள், 11 சிக்ஸர்களுடன் 113 ரன்களை குவித்தார், வைபவ் சூர்யவன்ஷி 45, சஞ்சு சாம்சன் 18 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.
113 ரன்களை விளாசிய அபிஷேக் சர்மா ஆட்டநாயகனாக தேர்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து பேசிய அபிஷேக் சர்மா நானும், சூர்யவன்ஷியும் ரசித்து ஆடினோம். பந்துவீசிய போதே பிட்சில் எக்ஸ்ட்ரா பவுண்ஸ் இருப்பதை கணித்து அதிரடியாக விளையாடினோம். எப்போதுமே அணி வெற்றி பெறுவது தான் முக்கியம் தனி மனித சாதனை அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.
