Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோடையில் 7,971 மெகாவாட் மின் பற்றாக்குறை – முன்கூட்டியே வாங்க வாரியம் திட்டம்

கோடையில் 7,971 மெகாவாட் மின் பற்றாக்குறை – முன்கூட்டியே வாங்க வாரியம் திட்டம்

சூப்பர் எல் நினோ தாக்கத்தால் 2027 கோடைக்காலத்தில் தமிழ்நாட்டின் மின்தேவை அதிகரித்து, உச்ச நேரங்களில் 7,971 மெகாவாட் வரை மின்பற்றாக்குறை ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, பற்றாக்குறையைச் சமாளிக்க முன்கூட்டியே மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்தேவை 23,672 மெகாவாட்டாக உயரக்கூடும் எனக் மின்வாரியத்தின் உள்மதிப்பீடு மற்றும் தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஏப்ரல், மே மாதங்களில் 3,200 மெகாவாட் மின்சாரமும், ஜூன், ஜூலை மாதங்களில் 2,000 மெகாவாட் மின்சாரமும் குறுகிய கால ஒப்பந்தங்கள் மூலம் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் 1,500 மெகாவாட்டும், நடுத்தர கால ஒப்பந்தங்கள் மூலம் 1,500 மெகாவாட்டும் பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கிடையே, ஏற்கனவே உள்ள மின்கொள்முதல் ஒப்பந்தங்களை மின்வாரியம் முழுமையாகப் பயன்படுத்தவில்லை என ஓய்வுபெற்ற மின்வாரியப் பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், செப்டம்பர் மாதத்தில் நடுத்தர கால ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்க வேண்டிய மின்சாரத்தில் 50 சதவீதம் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அதிக விலை கொண்ட குறுகிய கால மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. எனவே, புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வதுடன், ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை முழுமையாகப் பயன்படுத்தி, சொந்த அனல்மின் நிலையங்களின் உற்பத்தியையும் சீராக பராமரிப்பதன் மூலம் அதிக விலை மின்சாரம் வாங்குவதை தவிர்க்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!