Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் புகையிலை பொருட்கள் விற்பனை-ஒருவர் கைது

திருச்சியில் புகையிலை பொருட்கள் விற்பனை-ஒருவர் கைது

திருச்சியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

திருச்சி அம்பிகாபுரம் ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அரியமங்கலம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் பாரதி தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, திருவெறும்பூர் தெற்கு காட்டுர் பகுதியை சேர்ந்த இளங்கோவன் (46) என்பவர் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இளங்கோவனை கைது செய்து அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதே போன்று திருச்சி ரயில்வே ஜங்ஷன்
நடைமேடை 5 ல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை இருப்பது தெரிய வந்தது இதையடுத்து ரயில்வே போலீசார் கொடுத்த தகவலின் பேரில் கண்டோன்மென்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு இருந்த 32 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர் இது குறித்து திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பு செல்வன் கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து புகையிலை பொருட்களை விட்டு சென்ற மர்ம ஆசாமி யார் ?என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஞ்சப்பூரில் முதியவர் மயங்கி விழுந்து சாவு

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில்
சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் முதியவர் ஒருவர் மயங்க நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். இதையடுத்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அன்று இரவு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார் இறந்த முதியவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை இது குறித்து திருச்சி கிழக்கு வடக்கு கே. சாத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெசி எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார் ? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!