Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் – ஒருவர் கைது!

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,000 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அரியமங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் அரியமங்கலம், திருவெறும்பூர், துவாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார், திருவெறும்பூர் வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை தனி வருவாய் ஆய்வாளர் ஆகியோர் இணைந்து கூட்டுத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, துவாக்குடி வ.உ.சி. தெருவில் உள்ள சமூக நலக்கூடம் அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள், 25 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில் இருந்த சுமார் 1,000 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக அப்பகுதியில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அரியமங்கலத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, உதயகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நவம்பர் 23ஆம் தேதி அவரைக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், டிசம்பர் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!
Secret Link