நீலகிரி மலை ரயில், மேட்டுப்பாளையத்திலிருந்து நேற்று காலை 7.10 மணிக்கு புறப்பட்டு, உந்து சக்தி குறைவால் 3 மணி நேரம் தாமதமாக மதியம் 1.45 மணிக்கு குன்னூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். ஹில்கிரோ, ரன்னிமேடு போன்ற ரயில் நிலையங்களிலும் தாமதம் ஏற்பட்டதால், குழந்தைகள், சிறுவர்கள் உணவு, குடிநீர் இன்றி தவித்தனர். மலை ரயிலை சிறந்த முறையில் பராமரித்து, புதிய என்ஜின்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி மலை ரயில் 3 மணி நேரம் தாமதம்- பயணிகள் அவதி
