பாபநாசம் அருகே திறந்த நிலையில் காணப்படும் சாக்கடைகளால் உற்பத்தியாகும் கொசுக்கள். நோய் தொற்று பரவும் அபாயம்..
கிராம பொது மக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கோபுராஜபுரம் விஎஸ்கே நகரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்..
அங்கு அமைக்கப்பட்டுள்ள சாக்கடைகள் ஆங்காங்கே விடிந்து விழுவதாகவும், சாக்கடை தண்ணீர் தேங்கி நிற்பதாகவும், மழை பெய்தால் சாக்கடை நீர் வீட்டின் உள்ளே புகுந்து நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதாகவும்..
சாக்கடைகள் சிறந்த நிலைகளில் காட்சியளிப்பதால் அதில் உற்பத்தியாகும் கொசுக்களால் குழந்தைகளுக்கு மஞ்சகால் மாலை நோய் பரவுவதாகவும், திறந்து கிடக்கும் சாக்கடையில் உள்ளே தெருவாசிகள் தவறி விழுந்து கை கால்கள் முறியும் நிலை ஏற்பட்டுள்ளதாகும்..
மேலும் தெருவிளக்குகள் முற்றிலும் எரியாத நிலையும், சாலை வசதிகள் சரியாக இல்லாமலும், மழை பெய்யும் தருவாயில் விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் மற்றும் கீழே தடுமாறி விழும் சூழ்நிலை இருந்து வருவதாகவும், முதியோர்கள் அச்சத்துடனே வாழ வேண்டிய நிலை இருந்து வருவதாகவும்..
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லை எனவும் வருத்தத்துடன் தெரிவிக்கும் கிராம பொதுமக்கள்..
கிராம பொது மக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு உடனடியாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர முயற்சி செய்ய வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
