Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலி வழங்ககோரி சிஐடியூ முழக்கப் போராட்டம்…

புதுக்கோட்டை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் எஸ்.சத்தையன் தலைமை வகித்தார். போராட்டத்தில் கலந்துகொண்டு திருச்சி மண்டல செயலாளர் எஸ்.அகஸ்டியன் கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், சங்கத்தின் திட்டச் செயலாளர் கு.நடராஜன், பொருளாளர் ஆர்.ஆறுமுகம் உள்ளிட்டோர் பேசினர். பல ஆண்டுகளாக சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி வழங்க வேண்டும். ஒப்பந்தகாரர் மூலம் அல்லாமல் வாரியமே ஒப்பந்த ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் முழக்கங்களாக எழுப்பப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!