Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நிதி நிலைமை சரியான பிறகு மற்ற திட்டங்கள் அறிவிக்கப்படும்”

நிதி நிலைமை சரியான பிறகு மற்ற திட்டங்கள் அறிவிக்கப்படும்”

ஆட்சி மாறும்போது நல்ல திட்டங்களை தொடர்வது வழக்கம்தான் என அமைச்சர் நிர்மல்குமார் எனக் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “ஆட்சி மாறும்போது நல்ல திட்டங்களை தொடர்வது வழக்கம்தான். ஒவ்வொரு ஆட்சியிலும் சில திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. நிதிநிலையை சீரமைக்கும் பணிகளை முதலமைச்சர் விஜய் செய்து வருகிறார். வரும் காலங்களில் மக்களுக்கான திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும். கடந்த ஆட்சியாளர்கள் பொதுத்துறை நிறுவனங்களை மூடும் அளவிற்கு நிதி நிலைமையை விட்டுச்சென்றனர். நிதி ஆதாயத்தை பெருக்க திமுக, அதிமுக ஆட்சி காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? நிதி நிலைமையை சீர்செய்யும் முயற்சியில் முதலமைச்சர் விஜய் ஈடுபட்டுள்ளார்.

அரசு சார்பிலான திட்டங்கள் 70-8- ஆண்டு திட்டங்கள்தான். ஒவ்வொரு ஆட்சியலும் விரிவாக்கம் செய்கின்றனர். ஒவ்வொரு ஆட்சியிலும் செய்வதுபோல்தான் இந்த நிதிநிலை அறிக்கையில் செய்துள்ளோம். புதிய நிதி ஆதாரங்களை சீரமைக்கும் பணிகளை முதல்வர் விஜய் செய்துவருகிறார். நிதி நிலைமை சரியான பிறகு மற்ற திட்டங்கள் அறிவிக்கப்படும். இருக்கும் நிதி நிலையை பொறுத்து மக்களுக்கு நல்ல திட்டங்களை அறிவித்துள்ளோம். தேனி உள்ளிட்ட மாவட்டங்களின் வனப்பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். அதுவரை எவ்வித வெளியேற்றமும் இருக்காது.” என்றார்.

error: Content is protected !!