சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை ஆற்றினார். அப்போது பேசிய முதல்வர் விஜய் கொள்கை ரீதியாகவும், நிலைப்பாடு ரீதியாகவும் வேறுபட்டிருந்தாலும் மக்கள் பணியே நம் அனைவருக்கும் முதன்மையான நோக்கம் என்றார். தவெக-வை தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றி. ஒன்றிணைந்து செயல்பட்டால் முதன்மை மாநிலமாக இருக்கும்.தமிழ்நாடு அரசியல்
நான் ஏதோ ஷூட்டிங்ல இருந்து நேரா வந்து CM ஆன மாதிரி சில பேர் இமேஜ் கிரியேட் பண்றாங்க.. அது வெறும் ரீல் தான் ரியல் கிடையாது. ரசிகர் மன்றம் தொடங்கிய போதே மக்கள் பணியாற்றினோம். பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் மட்டும் உடன்பாடில்லை என வெளிப்படையாக தெரிவித்தோம். ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தேன். 2024-ல் கட்சி துவகைய உடனேயே சிஏஏ-வை எதிர்த்து அறிக்கை விட்டேன்.
ஒவ்வொரு குடும்பமும் முக்கியம் என்பதே தவெக-வின் நிலைப்பாடு. ஊழலற்ற ஆட்சியை வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியே இன்றி சுமார் 35% வாக்கு வாங்கினோம். மதம், சாதி, வாக்குக்கு பணம் என்பதை உடைத்து உள்ளோம். ஆட்சிக்கு வந்த 40 நாட்களில் சிங்கப்பெண் படை, பயிர்க்கடன் தள்ளுபடி, மதுக்கடைகள் மூடல் என பல விஷயங்களை செய்துள்ளதாக பட்டியலிட்டுள்ளார் முதல்வர் விஜய். ஊழலற்ற, பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை தருவதே எங்கள் இலக்கு. தவெக ஆட்சி சாமானிய மக்களுக்கான ஆட்சியாக உள்ளது. கண்ணை மூடிக்கொண்டு ஒன்றிய அரசை எதிர்ப்பவர்கள் நாங்கள் அல்ல. அதே போல எதிர்கட்சியினரின் தூண்டுதலால் தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் ஆங்காங்கே நடைபெறுவதாக முதல்வர் பேசினார்.
மின் வெட்டு நிலைமை விரைவில் சரி செய்யப்படும் என பேரவையில் முதலமைச்சர் விஜய் கூறினார். “மின் தடையை சரி செய்ய 10 உயர்மட்ட கண்காணிப்பு குழுக்கள், 125 சிறப்பு மின் தடை நீக்க ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது” என்றார்.
