Skip to content
Home » பாபநாசத்தில் ரேசன் கடை திறப்பு… எம்எல்ஏ திறந்து வைத்தார்….

பாபநாசத்தில் ரேசன் கடை திறப்பு… எம்எல்ஏ திறந்து வைத்தார்….

பாபநாசத்தில் ரேஷன் கடை கட்டடத் திறப்பு விழா நடந்தது. பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதி 21- 22 ரூ 15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டட திறப்பு விழா நடந்தது. திமுக தஞ்சை வடக்கு மாவட்டச் செயலரும், ராஜ்ய சபா எம்.பியுமான கல்யாண சுந்தரம் தலைமை வகித்தார். பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா ரேஷன் கடை கட்டடத்தை திறந்து வைத்தார். இதில் பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, திமுக ஒன்றியச் செயலர்கள் பாபநாசம் வடக்கு தாமரைச் செல்வன், தெற்கு நாசர், பாபநாசம் பேரூர் செயலர் கபிலன், துணைச் செயலர் உதயகுமார், பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி, பெருமாள் கோயில் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன், ராஜகிரி ஊராட்சி மன்ற உறுப்பினர் முபாரக் உசைன், ஒன்றியக் குழு உறுப்பினர் விஜயன், செல்வ முத்துக் குமரன், பாவை அனிபா, அறிவழகன், பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!