திருச்சி சத்திரம் பேருந்து நிலைய பகுதியை சேர்ந்தவர் கஜலட்சுமி (28).இவருக்கு திருமணம் ஆகி ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆதரவற்ற நிலையில் தவித்து வந்த கஜலட்சுமி திருச்சி அரசு மருத்துவமனை பகுதியில் குழந்தையுடன் சுற்றி திரிந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம பெண் அவரிடம் பேச்சு கொடுத்து டீ மற்றும் டிபன் வாங்கி கொடுத்து வந்துள்ளார். பின்னர் நேற்று மாலை உன்னையும் உன் குழந்தையையும் நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறி டவுன் பஸ்ஸில் பஞ்சப்பூர் பஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவருக்கு உணவு வாங்கி கொடுத்தார்.
அப்போது அவரது குழந்தையை அந்த மர்ம பெண் வைத்திருந்தார். பின்னர் கெஜலட்சுமி இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள கழிப்பிடத்திற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை வைத்திருந்த அந்த மர்மப் பெண் மாயமாகிவிட்டார். உதவி செய்வது போல் நடித்து குழந்தையை அந்த மர்ம பெண் கடத்திச் சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கஜலட்சுமி கதறி துடித்தார் பின்னர் இது பற்றி எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் செய்தார் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர் மேலும் அங்குள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர். உதவி செய்வது போல நடித்து ஆறு மாத பெண் குழந்தையை மர்மப் பெண் கடத்திச் சென்ற சம்பவம் பஞ்சப்பூர் பஸ்ஸிலயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
