Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாடாளுமன்ற விழா புறக்கணிப்பு….மறுபரிசீலனை செய்க…… அமைச்சர் வேண்டுகோள்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி தான் திறந்துவைப்பார் என மத்திய மந்திரிகள் கூறி வருகின்றனர். இதனால், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என்று திறப்பு விழாவை புறக்கணிப்பதாகவும் காங்கிரஸ், திமுக உள்பட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக புறக்கணித்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேறப்போவதில்லை என்ற முடிவை மறுபரீசிலனை செய்து திறப்பு விழாவில் பங்கேற்கும்படி நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரச்சினை இல்லாத விவகாரத்தில் பிரச்சினை ஏற்படுத்தி விழாவை புறக்கணிப்பது துரதிர்ஷ்டவசமானது. விழாவில் பங்கேற்கப்போவதில்லை என்ற முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரீசிலனை செய்து விழாவில் பங்கேற்க வேண்டும் என வெண்டுகோள் விடுக்கிறேன்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!