Skip to content

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.15,000– மகேஸ் அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்களுடன் இன்று காலை 11 மணியளவில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த மாதம் முதல் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், பகுதிநேர ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகளான ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் ஆகியவை குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 12,500 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இது ரூ.2,500 உயர்வு என்பதால், பொங்கல் பண்டிகை நாளில் அவர்களுக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

மே மாதம் முதல் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.10,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.அமைச்சர் மேலும் கூறுகையில், தேர்தல் வாக்குறுதி எண் 181-ஐ நிறைவேற்ற வேண்டும் என்பதே பகுதிநேர ஆசிரியர்களின் முதன்மை கோரிக்கையாக இருப்பதாகவும், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.3,548 கோடி இன்னும் விடுவிக்கப்படாததால் ஏற்பட்ட சிரமங்களை சுட்டிக்காட்டினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது இந்தப் போராட்டத்தின் நிலை குறித்து விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.பணி நிரந்தரம் தொடர்பான கோரிக்கை குறித்து, பள்ளிக்கல்வித் துறை மற்றும் சட்டத்துறை இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதன் பிறகு முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். பகுதிநேர ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த அறிவிப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.இந்த அறிவிப்பு தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் பரிசாக அமைந்துள்ளது. நீண்டகால கோரிக்கைகள் நிறைவேறும் நிலையில், அவர்களின் போராட்டம் பலனளித்துள்ளது என்று பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன. பணி நிரந்தரம் தொடர்பான அடுத்தகட்ட அறிவிப்புகளுக்கும் ஆசிரியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

error: Content is protected !!