திருச்சிக்கு வந்த சோழன் விரைவு ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையிலிருந்து திருச்சிக்கு நேற்று (திங்கட்கிழமை)மாலை 4 மணிக்கு வந்த சோழன் அதிவிரைவு ரயிலின் முன்பக்க முன்பதிவற்ற பொதுப்பெட்டியில் உள்ள கழிவறையில் ஆண் ஒருவர் தூக்கிலிட்ட நிலையில் இறந்து கிடப்பதாக, ரயில் பயணி கள் திருச்சி ரயில்வே போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில், அங்குசென்ற போலீஸார், இறந்து கிடந்தவரை மீட்டு
உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்தவருக்கு சுமார் 50 வயது இருக்கலாம். தனக்குத்தானே தூக்கிட்டு இறந்துள்ளார். இறந்தவரின் சட்டைப் பையில் சிங்கபெ ருமாள் – கிளாம்பாக்கம் வந் ததற்கான பேருந்து பயண டிக்கெட் வைத்துள்ளார். நீலம், சிவப்பு, வெள்ளை கட்டம் போட்ட மேல் சட்டையும், காப்பி நிற கால் சட்டையும் அணிந்திருந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து திருச்சிரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்ற னர்.

