Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போலி பாஸ்போர்ட்டில் துபாயிலிருந்து திருச்சி வந்த பயணி கைது….

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது அவர் போலி பாஸ்போர்ட்டில் துபாயில் இருந்து திருச்சி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் ராவுத்தர் ( 48)என்பது தெரியவந்தது. இதையடுத்து இமிகிரேசன் அதிகாரி பவன் குமார் ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராவுத்தரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!