தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் முத்தம்மாள் கோயில் தெருவில் முத்தம்மாள் கோயில் அருகே உள்ள உயர் மின் அழுத்த மின்கம்பி வழியாக இன்று மாலை ஒரு பெண் மயில் பறந்து வரும்போது எதிர்பாராதவிதமாக மயிலின் ரெக்கையானது மின் கம்பியில்பட்டு பலத்த சத்தத்துடன், தீப்பொறி ஏற்பட்டு அப்படியே மயங்கி கீழே விழுந்தது. அப்போது அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுசீந்திரன்,

அடிபட்டு கீழே மயங்கி கிடந்த மயிலை தூக்கி அதற்கு முதலுதவி செய்து, காப்பாற்றி இது குறித்து அதிராம்பட்டினம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அதிராம்பட்டினம் போலீசார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையைச் சேர்ந்த வேட்டை தடுப்புக் காவலர் அசோக்குமாரிடம் நமது நாட்டின் தேசிய பறவையான மயிலை உயிருடன் ஒப்படைத்தார். இந்த செயலை செய்த சுசீந்திரனை மனிதநேயம் உள்ள பலரும் பாராட்டி வருகின்றனர்.
