தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது. தேடுதல் குழு பரிந்துரைக்கும் பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வு செய்து துணைவேந்தராக நியமிக்க அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையின்போது தமிழக அரசு இந்இ கோரிக்கையை முன்வைத்துள்ளது.
