கரூர் வாங்கப்பாளையம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி இவரது மனைவி பாப்பாத்தி 65. இவர் கடந்த 4ம் தேதி தனது பேரனுடன் ஜனசதாப்தி விரைவு ரயிலில் கரூரிலிருந்து திருச்சி வரை ஊனமுற்றோர் பெட்டியில் பயணம் செய்தார். அப்போது தனது கைப்பையில் வைத்திருந்த 4 பவுன் செயினை மர்ம நபர்கள் அபேஸ் செய்து விட்டனர். இதுகுறித்து திருச்சி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று தலைமை தபால் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த பாலக்கரை காஜா பேட்டை கீழகிருஷ்ணன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த
ராம்குமார் 38 என்பவரை விசாரணை பிடித்து, விசாரணை செய்ததில் தான் திருடியதை ஒப்புக் ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து போலீசார் களவு போன செயினை மீட்டு அவரை கைது செய்து திருச்சி நான்காவது ஜூ டீசியல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் விரைந்து செயல்பட்ட சப் இன்ஸ்பெக்டர் கவிதா, ஏட்டு ஏழரசன் மற்றும் காவலர் சேகர் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
