Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… மக்களுக்கு அடுத்த ஷாக்

மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை அதிகரித்து வருகிறது.

கடந்த மார்ச் மாதமே, பல நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டன. இம்மாதம், 15ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 3 முறை உயர்த்தப்பட்டு விட்டன.

அதாவது, பெட்ரோல் விலை 4 ரூபாய் 78 காசுகளும், டீசல் விலை 4 ரூபாய் 84 காசுகளாகவும் உயர்வை சந்தித்தன.

இந்த நிலையில், கடந்த 10 நாட்களில் 4வது முறையாக பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 46 காசுகளும், டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!