டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, மேற்கு ஆசிய போரால் எரிபொருள் விலையை சமாளிக்க உலக நாடுகள் போராடி கொண்டிருந்தபோது இந்தியா தனித்து நின்றது என தெரிவித்துள்ளார்.
பல நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 20 முதல் 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும், ஆனால், மத்திய அரசு பெட்ரோலுக்கு 3.2 சதவீதம், டீசலுக்கு 3.4 சதவீதம் மட்டுமே உயர்த்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கச்சா எண்ணெய் விலை 100 டாலர்களைத் தாண்டிபோது இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வாரக்கணக்கில் இழப்புகளை சந்தித்தது என்றும்,
இதுவே பொறுப்புணர்வுடன் கூடிய நல்லாட்சியின் தலைமை பண்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரதமர் மோடிநின் தலைமையின் கீழ் இந்தியா பொருளாதார நிலைத்தன்மையையும் மக்கள் நலனையும் ஒருங்கே பேணி காத்து வருவதாக கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
