Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெட்ரோல் பங்க்கில் பயங்கர தீ விபத்து… 35 பேர் கருகி பலி…

ரஷியாவின் தெற்கு பகுதியில் டகிஸ்டன் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகர் மக்ஹச்கலா நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. பெட்ரோல் நிலையம் அருகே இருந்த கார் பழுதுபார்க்கும் கடையில் முதலில் தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பெட்ரோல் பங்க் மீது பரவியது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 35 பேர் உயிரிழந்தனர். மேலும், 115 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!