தாய்லாந்தின் தெற்கு நாரதிவாட் மாகாணத்தில் உள்ள சுங்கை கோலோக் நகரில், (ஆகஸ்ட் 4) மாலை கால்பந்து மைதானத்தில் மின்னல் தாக்கியதில் தாய்லாந்து கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், மலேசிய வீரர் உட்பட 12 பேர் காயமடைந்தனர். சாந்திபாப் மைதானத்தில் நடைபெற்ற பிராந்திய கோலோக் கால்பந்து கோப்பை போட்டியின் போது இந்த துயரம் நடந்தது. இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
