Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சட்டமன்ற தேர்தல்.. குடந்தையில் போலீஸ் அணி வகுப்பு

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் கொளுத்தும் வெயிலில் காவல்துறையினர் மற்றும்மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சேர்ந்து அணிவகுப்பு ஊர்வலம்

தமிழக சட்டமன்ற தோ்தலையொட்டி திருநாகேஸ்வரம் திருபுவனத்தில் காவல்துறையினுடன் சேர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது.
திருநாகேஸ்வரம் பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கிய போலீஸ் அணிவகுப்பை டிஎஸ்பி அழகேசன் கொடி அசைத்து துவக்கி வைக்க திருநாகேஸ்வரம் முக்கிய வீதிகள் மற்றும் கும்பகோணம் காரைக்கால் சாலையில் அணிவகுப்பு நடைபெற்றது.
இதேபோன்று திருபுவனத்திலும் போலீஸ் கொடி அணிவிப்பு நடைபெற்றது தமிழக சட்டமன்ற தோ்தலையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய பாதுகாப்பு படையினா் 80 போ், தமிழக காவல் துறையை சோ்ந்த 20 போ் என மொத்தம் 100-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்ற அணிவகுப்பு, திருபுவனத்தில் தொடங்கி திருபுவனம் கடைவீதி, திருவிடைமருதூர் தாலுகா அலுவலகம்,
கடைவீதி வழியாக பேண்ட் வாத்தியங்கள் முழங்க கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நடந்து சென்றனர். சாலைகளின் இருபுறமும் பொதுமக்கள் போலீஸ் அணிவகுப்பை பார்த்து வியந்தனர்.

error: Content is protected !!