Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவலர் நினைவுதினம்…… புதுகையில் அனுசரிப்பு

தேசத்தின்  பாதுகாப்புக்காக  தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த துணிச்சலான காவலர்களுக்கு  மரியாதை செலுத்தும் வகையில் தேசிய காவல் தினம்  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.  அந்த வகையில் இன்று 21.10.24 காலை 7.30 மணிக்கு

புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில், காவல்துறையில் பணியில் உயிர்நீத்த வர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே  கலந்து கொண்டு காவலர் நினைவுத்தூணில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனைத்தொடர்ந்து, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் , காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டு  மரியாதைசெலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!