கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு இன்று (நவ.13) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அப்போது வாக்காளர்கள் வருகை சுமாராகவே இருந்தது.
வயநாடு தான் பிரியங்கா காந்திக்கு தேர்தல் அரசியல் பிரவேசம் என்பதால் இத்தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
வயநாட்டின் சுல்தான் பத்தேரி, கல்பேட்டா, மானந்தவாடி, மலப்புரம் மாவட்டத்தின் எரநாடு, நீலாம்பூர், வாண்டூர், கோழிக்கோட்டின் திருவம்பாடி என வயநாடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டு இந்த மூன்று மாவட்டங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. வயநாட்டு தொகுதியில் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
