Skip to content
Home » முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் காலமானார்….

முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் காலமானார்….

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக (போப் ஆண்டவர்) கடந்த 2005 முதல் 2013 வரை இருந்தவர் 16-ம் பெனடிக்ட். இவர் கடந்த 2013-ம் ஆண்டு தாமாக போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகினார். அதன்பின்பு அவர் வாட்டிகனில் உள்ள குருமடத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். 95 வயதாகும் அவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஓய்வுபெற்ற போப் 16ம் பெனடிக்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில், முன்னாள் போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். கடந்த 1415-ம் ஆண்டுக்கு பிறகு போப் ஆண்டவர் பதவியில் இருந்து தாமாக பதவி விலகியவர் 16-வது பெனடிக் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!