மது விற்றவர் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எடமலைப்பட்டி புதூர்
நேதாஜி நகர் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற எடமலைப்பட்டி புதூர் கிரிஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சேகர் (54) என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் இருந்த 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று பொன்மலை சந்தை அருகே மது விற்ற மேலகல்கண்டார் கோட்டை சாமிநாதன் நகரைச் சேர்ந்த தமிழ் செல்வன் (30 ) கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவித்தனர். அவர்களிடம் இருந்து 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தீனா, மதன் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் நேற்று போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பாலக்கரை மசூதி அருகே போதை மாத்திரை விற்ற குட்செட் ரோடு ஆசாரி தெருவைச் சேர்ந்த ஆரிஃப் கான் (22) மற்றும் சங்கிலியாண்டபுரம் பாரதிநகரை சேர்ந்த கலியமூர்த்தி (24) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 18 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்ற பெண் கைது
திருச்சி புத்தூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் நேற்று போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது புத்தூர் அருகே கஞ்சா விற்ற பாலக்கரை சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த தேவி (44) என்ற பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்த 1 கிலோ 630 கிராம் கஞ்சா மற்றும் 1 டூவீலரை பறிமுதல் செய்தனர்.
