தலைநகர் சென்னையில் எழுந்துள்ள மின்வெட்டு பிரச்னை முதல்வர் விஜய்க்கு தலைவலியாக அமைந்துள்ளது. நள்ளிரவில் 4 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக கொளத்தூரில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கோடை காலத்தில் மின்சாரம் இல்லாமல் இரவில் சிரமத்தை சந்திப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடிப்பதற்குள் நிலைமையை சரிசெய்யுமாறு அரசு உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
