திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம். 110/33-11 கி.வோ.பூவாளூர் துணை மின் நிலையத்திலிருந்து, மின்னோட்டம் பெறும் 11 KV பிண்ணவாசல் உயர் அழுத்தம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 10.02.2025 அன்று காலை 11.00 மணி முதல் 5.00 மணிவரையிலும் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடைக்குட்பட்ட பகுதிகளான- பூவாளூர் கடைவீதி, மாதானம் வடக்குத்தெரு, நடுத்தெரு பத்துகட்டுதெரு புதுக்குடி, மற்றும் ராஜா தெரு பெரியார் தெரு,திருவள்ளுவர் தெரு மற்றும் பூவாளூர் பைபாஸ் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

