சென்னை சென்ட்ரல் முதல் பெங்களூரு பையப்பனஹள்ளி வரை 306.2 கி.மீ. தூரத்திற்கு புதிய புல்லட் ரயில் பாதை அமைப்பதற்கான முன்-கட்டுமான பணிகள் மற்றும் புதிய திட்ட அறிக்கை தயாரிப்பிற்கான டெண்டரை மத்திய அரசு கோரியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இரு நகரங்களுக்கும் இடையேயான பயண நேரத்தை குறைக்கும் நோக்கில், அதிவேக ரயில் பாதை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. வரும் 2035-ம் ஆண்டிற்குள் முழுமையாக இந்த திட்டத்தை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை-பெங்களூரு புல்லட் ரயில் திட்ட முன்-கட்டுமான பணிகள் துவக்கம்
