Skip to content

ஜனாதிபதி முர்மு வருகை…. திருச்சியில் ட்ரோன்கள் பறக்க 2 நாள் தடை

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு  நாளை மறுநாள் விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜனாதிபதி முர்மு, திருவாரூர்  மத்திய பல்கலைக்கழகத்தில்  நடைபெறவுள்ள  பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க செல்கிறார்.

ஜனாதிபதி திருச்சி வருகையையொட்டி திருச்சி மாவட்டத்தில்  நாளை மற்றும்  நாளை  மறுநாள் பாதுகாப்பு கருதி   ஜனாதிபதி திரவுபதி முர்மு  செல்லும்  சாலைகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
நாளையும்,நாளை மறுநாளும் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர்  பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!