Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செம்மண் கடத்தல் தடுப்பு: குமரி கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

செம்மண் கடத்தல் தடுப்பு: குமரி கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லை சேர்ந்த சுனில் குமார், கருங்கல் பேரூராட்சியில் தாதுக்கள் நிறைந்த செம்மண் கடத்தப்படுவதை தடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

கருங்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தாது வளம் மிகுந்த செம்மண் அதிகமாக உள்ளது. இந்த செம்மண்களை சட்ட விரோதமாக பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளின் துணையுடன் சிலர் கடத்தி பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகரிகளிடம் நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தும், புகாரின் அடிப்படியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த தாதுக்கள் நிறைந்த செம்மண் கடத்தலை தடுக்க வேண்டும், கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமில்லாமல் இதற்கு துணை போன அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் நீதிபதி ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரனை போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரம் குறித்து விசாரனை நடத்தப்பட்டு, அதில் 1400 மெட்ரிக் டன் மணல் கடத்தப்பட்டுள்ளது என்றும் இது சம்பந்தமாக 8 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பத்தப்பட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கு தாக்கல் செய்த தங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் பெயரை கூறி பேரூராட்சி தலைவர் மிரட்டுவதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் செம்மண் கடத்தலை தடுக்க இதுவரை எடுத்த நடவடிக்கை குறித்து நிலை அறிக்கையை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அபராதம் விதிக்கப்பட்டுள்ளது ஆனால் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்பது குறித்து காவல்துறை தரப்பிலும் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு நவ.21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

error: Content is protected !!