திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் லட்டு, முறுக்கு உள்ளிட்ட பிரசாதங்களின் விலையை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதன்படி, ரூ.10-க்கு விற்கப்பட்ட லட்டு ரூ.20 ஆகவும், முறுக்கு ரூ.25 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதுடன், பொங்கல் மற்றும் புளியோதரையின் அளவுகள் அதிகரிக்கப்பட்டு அவற்றின் விலையும் ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிரசாதங்களின் தரம் மற்றும் அளவை உயர்த்தும் பொருட்டே இந்த விலை உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கோயில் துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
