நெல்லை மாவட்டம் தேவர்குளத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியாருக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். 4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பதிவான இந்த வழக்கில் பாதிரியாருக்கு மரண தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க அரசுக்கு ஆணையிட்டுள்ளது.
