Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெங்களூரு வந்திறங்கினார் பிரஜ்வல் ரேவண்ணா.. சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்..

கர்நாடகாவில், பிரதான எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா(33). ஹாசன் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் பெண்களை மிரட்டி, பலாத்காரம் செய்ததாகவும், ஏராளமான ஆபாச வீடியோக்கள் வைத்திருந்ததாக கடந்த மாதம் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. ஏப். 26ம் தேதி இரவு, ஜெர்மனிக்கு தப்பியோடினார். பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஹொளேநரசிபுரா போலீசில் அவர் மீது மூன்று பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 28-ம் தேதி சமூக வலைதளங்களில் பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டார். அதில் மே.31-ம் தேதி நாடு திரும்புவதாகவும், சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராக உள்ளதாவும் தெரிவித்தார்.  ஜெர்மனின் முனிச் நகரிலிருந்து புறப்பட்டு நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் பெங்களூரு விமான நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா வந்திறனார். அங்கு காத்திருந்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை கைதுசெய்து சி.ஐ.டி. அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். முன்னதாக அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இன்று காலை 10:00 மணிக்கு எஸ்.ஐ.டி., முன்னர் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா விசாரணைக்கு ஆஜர்படுத்தப்படுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!