டெல்லி: வினாத்தாள் கசிவு குற்றவாளிகளை பாதுகாப்பதே பிரதமர் மோடிதான். இளைஞர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி சிதைத்துவிட்டார் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் கரப்பன்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். காவல்துறையினர் மற்றும் சிஆர்பிஎப் படை வீரர்கள் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்றனர். இந்த நிலையில் 4வது நாளக டெல்லியில் இளைஞர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் போராட்டகாரர்களுக்கு ஆதரவு அளிக்க மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சென்றிருந்தார். இந்த நிலையில் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களை காவல்துறையினர் மற்றும் சிஆர்பிஎப் படை வீரர்கள் துண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
இதனிடையே வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், நமது இளைஞர்களின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்க முயல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பவிடப்படமாட்டார்கள் என்று இன்று காலை பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வினாத்தாள் கசிவு குற்றவாளிகளை பாதுகாப்பதே பிரதமர் மோடிதான் என குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பான சமூக வலைதள பதிவில்;
எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை மிக அதிகமாகச் சீர்குலைத்தவர் நீங்கள்தான்.
எங்கள் கல்வி முறை முற்றிலுமாகக் கைப்பற்றப்பட்டுச் சீரழிக்கப்படுவதை நீங்கள் அனுமதித்தது மட்டுமல்லாமல், இதைத் தீவிரமாக ஊக்குவித்தும், இதற்குக் காரணமான அனைவரையும் பாதுகாத்தும் உள்ளீர்கள்.
மாணவர்களின் கோரிக்கைகள் தெளிவாக உள்ளன:
1. தர்மேந்திர பிரதானைப் பதவியிலிருந்து நீக்குங்கள்.
2. மாணவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்.
3. அவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். என பிரதமர் மோடியின் சமூக வலைதள பதிவை மேற்கொள்காட்டி பதிவிட்டுள்ளார்
