Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

 இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

மகளிர் இட ஒதுக்கீட்டை 2029 லோக்சபா தேர்தலில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக 131வது அரசியல் சட்டதிருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர் நடந்தது.

இதில் மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான 131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு லோக்சபாவில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காததால் தோல்வி அடைந்தது. பெரும்பான்மைக்கு 352 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் மசோதாவுக்கு ஆதரவாக 298, எதிராக 230 எம்பிக்களும் ஓட்டளித்தனர்.

இந்நிலையில் இன்றிரவு 8:30 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது என்ன உரையாற்ற உள்ளார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.

error: Content is protected !!