தமிழகத்தில் தனியார் பேருந்துகளில் தன்னிச்சையாக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக பட்டுக்கோட்டை-தஞ்சை வழித்தடத்தில் முன்பு ரூ.31 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.35 ஆகவும், ரூ.36 ஆக இருந்த கட்டணம் ரூ.40 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இலவச பேருந்து திட்டத்தால் பெண்கள் அரசு பேருந்துகளில் செல்வதால் தனியார் பேருந்துகளில் கூட்டம் குறைந்து வருவாய் இழப்பு ஏற்படுவதாக உரிமையாளர்கள் கூறுகின்றனர். அரசு கட்டணத்தை உயர்த்தி தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனியார் பஸ் கட்டண உயர்வு: பயணிகள் அதிர்ச்சி
