Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லாரி மீது தனியார் ஆம்னி பஸ் மோதி விபத்து.. 10 பேர் படுகாயம்

லாரி மீது தனியார் ஆம்னி பஸ் மோதி விபத்து.. 10 பேர் படுகாயம்

மதுரை: கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து நேற்று இரவு சுமார் 30 பயணிகளுடன் கிளம்பியது.

இன்று அதிகாலை மதுரை திண்டுக்கல் நான்கு வழி சாலை வாடிப்பட்டி அருகே வந்த போது முன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால், அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோதிய வேகத்தில் ஆம்னி பேருந்து சாலையின் சென்ட்ரல் மீடியன் மீது மோதியது. விபத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் பேருந்தின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.

மேலும் இந்த விபத்தில் பயணிகள் 10 பேர் வரை காயமடைந்துள்ளனர். ஆம்னி பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் 10 பேர் படுகாயங்களுடன் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நான்கு வழி சாலையில் தொடர்ந்து விபத்தானது அதிகரித்து வருகிறது.

error: Content is protected !!