Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாஸ்மாக் தனியார் மயமாக்குவதா?அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு சார்ந்த டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் தனியார்மயமாக்குவது குறித்துத் தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே இதற்கான சட்டத்திருத்தங்களைக் கொண்டு வரவும், முதற்கட்டமாக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட கடைகளைத் தனியாரிடம் ஒப்படைக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், இத்திட்டத்திற்குப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மதுபானக் கடைகள் அரசு நிர்வாகத்தின் கீழ் நேரடியாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் விற்பனை முறைகேடுகள், கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவது உள்ளிட்ட புகார்களுக்குத் தீர்வு காணும் வகையில், கடைகளின் நிர்வாகத்தில் மாற்றங்களைக் கொண்டுவர அரசுத் தரப்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் தனியார்மயமாக்கும் அரசின் இந்த ஆய்வின் கீழ், முதற்கட்டமாக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் அமைந்துள்ள கடைகளைத் தனியார் வசம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதற்காக வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தேவையான சட்டத்திருத்தங்களைக் கொண்டுவரவும் அரசு ஆலோசித்து வருகிறது. தமிழ்நாட்டில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளைத் தனியார் வசம் ஒப்படைப்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வரும் நிலையில், டாஸ்மாக் கடைகளைத் தனியார்மயமாக்கும் அரசின் இந்த பரிசீலனைக்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சுமார் 2,500 டாஸ்மாக் கடைகளைத் தனியார்மயமாக்க அரசு ஆலோசித்து வருவதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகவும், இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

டாஸ்மாக் கடைகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டைப் போதையற்ற மாநிலமாக மாற்ற அனைத்துக் கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு, மதுபானங்களின் மொத்தக் கொள்முதலை மட்டும் அரசின் கீழ் வைத்துக்கொண்டு, மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பா்களை ஏல முறையில் தனியாருக்கு வழங்க அரசு ஆலோசித்து வருகிறது.

அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவது (Over MRP) போன்ற புகார்களைத் தவிர்க்கவும், நிர்வாகப் பணிச்சுமையைக் குறைக்கவும் அண்டை மாநிலங்களின் (புதுச்சேரி, கர்நாடகா) மாதிரியைப் பின்பற்ற அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

அரசு மது விற்பனையைத் தனியார் வசம் ஒப்படைப்பது மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் என்பதால், பூரண மதுவிலக்கு என்ற பாமகவின் கொள்கை நிலைப்பாட்டில் இருந்து அன்புமணி ராமதாஸ் இதற்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

error: Content is protected !!