Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஊர்வலம்…பரபரப்பு…

சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஊர்வலம்...பரபரப்பு

மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி காமராஜர் சாலை நடுவே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது…

சென்னை காமராஜர் சாலையின் நடுவே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான காலி பணியிடங்களை கண்டறிந்து சிறப்பு முகாம்கள் மற்றும்

நேரடி பணி நியமனங்கள் மூலம் உடனுக்குடன் நிரப்புவது தொடர்பான வழிகாட்டுதல்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும்

அரசு மற்றும் பொது நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நான்கு சதவீத சட்டப்பூர்வ இட ஒதுக்கீட்டை முறையாக செயல்படுத்துதல் மற்றும் தொழிற்பயிற்சி பெற்ற பார்வையற்றோருக்கு முன்னுரிமை அளித்தல் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு தொழிற்பயிற்சி மறுவாழ்வு திட்டங்கள் மற்றும் பணி நியமன செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையும் விரைவு தன்மையும் உறுதி செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

காமராஜர் சாலை நடுவே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 50க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது…

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை நடுவே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பேரணையாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது அங்கு வந்த இரண்டு காவலர்கள் அவர்களை பத்திரமாக அழைத்துச் சென்றனர்…

error: Content is protected !!