Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வரை சந்தித்து ரூ.10 லட்சத்தை வழங்கிய தயாரிப்பாளர்கள்

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினார்கள். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும் முதல்வரை சந்தித்து, பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். இந்த சந்திப்பின்போது
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் டி.ஜி. தியாகராஜன், பொதுச் செயலாளர்  டி. சிவா, பொருளாளர் ஜி. தனஞ்ஜெயன் துணை தலைவர்கள் எஸ்.ஆர். பிரபு, எஸ்.எஸ். லலித் குமார், இணை செயலாளர்கள்  முகேஷ் ஆர். மேத்தா மற்றும் எஸ். வினோத் குமார் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

error: Content is protected !!