Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பேராசிரியர் சாலமன் பாப்பையா காலமானார்.. பாரதி பாஸ்கர் கண்ணீர்

மதுரையைச் சேர்ந்த புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா. இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேரராசிரியாக பணிபுரிந்தவர். இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை மிகுந்த பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்துபவர். இதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்றே சொல்லலாம். பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர். இவர் சங்கர் இயக்கிய முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார். சாலமன் பாப்பையா சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.அவை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: ஓர் பார்வை, உறை மலர்கள், திருக்குறள் உறையுடன் போன்றவை.மக்களிடம் தன் நகைச்சுவையால் பல கருத்துகளை கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா.

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா “தமிழ் அறிஞர்” என்றும் “இயல் கலை அறிஞர்” என்றும் அழைக்கப்படுகிறார். அவருக்கு 2000ஆம் ஆண்டில் தமிழக அரசால் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. 2010-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவருக்கு “முத்தமிழ் பேரறிஞர்” விருது வழங்கியது. 2021ஆம் ஆண்டு இவரது கலைத்துறை, தமிழ் வளர்ச்சி பங்களிப்புக்காக இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதே போல் பாப்பையா தமிழில் எம்.ஏ. பட்டமும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.பட்டிமன்ற நடுவராக வலம் வந்த அவர் 13,000 பட்டிமன்றங்களில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். டிவி மட்டுமின்றி சினிமாவிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். புது வருஷம், பாய்ஸ், எஸ் மேடம், சிவாஜி உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சிவாஜி படத்தில் பக்கத்துவீட்டுக்காரர் கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு இன்றும் ரசிக்கத்தக்க வகையில் நகைச்சுவையை கொண்டிருக்கும்.

சாலமன் பாப்பையாவுக்கு அண்மைக்காலமாக வயோதிக பிரச்சினைகளால் அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பும் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1.30 மணி அளவில் காலமானார்.

சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்களும் தமிழ் பற்றாளர்களும் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவரது மறைவு குறித்துக் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்த பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர், “தகப்பனை இழந்துவிட்டோம்; யாரும் இல்லாத அநாதையாகிவிட்டது போல் இருக்கிறது” எனக் கூறித் தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

error: Content is protected !!