Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மறுவரையறைக்கு எதிர்ப்பு- ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளர் வீட்டில் கருப்பு கொடி ஏற்றி ஆர்பாட்டம்

ஜெயங்கொண்டம் – தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு ஜெயங்கொண்டம் தொகுதி எம்எல்ஏவும் வேட்பாளருமான கண்ணன் தனது வீட்டில் கருப்பு கொடியேற்றி தொகுதி மறு வரை நகலை எரித்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவறைக்கான மசோதா இன்று பாஜக அரசு தாக்கல் செய்கிறது. இம்மசோதாவினால் தமிழ்நாட்டில் மக்கள் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுவதை தடுக்கவும் மாநிலத்தின் உரிமைகளை பாதுகாக்கவும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று திமுக தலைவரும்

முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து ஜெயங்கொண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்,ஏ வும், ஜெயங்கொண்டம் திமுக சட்டமன்ற வேட்பாளர் க.சொ.க. கண்ணன் தனது வீட்டில் கருப்புக் கொடி ஏற்றி தொகுதி மறு வரை நகலை எரித்து மத்திய அரசிற்கு எதிராகவும் தொகுதி மறு வரைக்கு ஆதரவாக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!