15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கம் – கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், அரசு அலுவலகங்கள் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு அரசு அலுவலகங்கள் முன்பு ஊழியர்கள் திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
குறிப்பாக, தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தல் வாக்குறுதியின் படி அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
தொடர்ந்து, அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், அரசு ஊழியர்களை பாதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறப்படும் அரசாணைகள் 115 மற்றும் 152-ஐ திரும்பப் பெற வேண்டும்.
மேலும், அரசு ஊழியர்களுக்கு கருணைத்தொகையுடன் கூடிய 7 ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதனிடையே, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு உடனடியாக செவி சாய்த்து, கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த மேலும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் வணிகவரித்துறை அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும், அரசு ஊழியர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அரசு ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்டமாக மேலும் தீவிரமான போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
