திருச்சி மாவட்டம் பழைய மதுரை ரோடு ராமகிருஷ்ணா பாலம் அருகே உள்ள ஜீவா நகரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ரயில்வே தண்டாவளம் அருகே வசித்து வருகின்றனர்.
அங்கு வீட்டின் அருகே உள்ள தண்டவாளம் சுற்று சுவர் அருகே முள் செடிகள் காடு போல் வளர்ந்து குப்பைகள் உள்ள அடர்ந்த காடு போல் உள்ளது…இந்த பகுதியை சுத்தம் செய்யக்கோரி பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை
இது குறித்து ஜீவா நகர் பொதுமக்கள் கூறுகையில்…
இந்த பகுதி குடியிருப்புகளில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே காலியான இடத்தில் முள் செடிகள் அடர்ந்த காடு போல் வளர்ந்து உள்ளது
இரவு பகல் நேரங்களிலும் பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ பூச்சிகள் வீட்டின் உள்ளே வருகிறது..
இதனால் தினமும் இரவு நேரங்களில் நிம்மதியான தூக்கத்தை இழந்து வருகிறோம் என தெரிவித்தனர்.
மேலும் கைக்குழந்தைகள் முதியவர்கள் தனியாக விட்டுச் செல்ல பயமாக உள்ளது.
.சமீபத்தில் கூட நீண்ட நீளமுள்ள விஷப் பாம்பு ஒன்று வந்து விட்டது,இதை அறிந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து உடனே பாம்பை பிடித்துச் சென்றனர்.
ஆகவே ரயில்வே நிர்வாகம் எங்களின் உயிரை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளை சுத்தம் செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் திருச்சி எம்பி துரை வைகோ பல்வேறு பணிகள் செய்து வருவதாக கேள்விப்படுகிறோம் அவருக்கும் எங்களுடைய கோரிக்கையை முன்வைக்கிறோம் என தெரிவித்தனர்.
இதற்கான நடவடிக்கையை ரயில்வே துறையிடம் தெரிவித்து இந்த பகுதியில் உள்ள குப்பை மற்றும் அடர்ந்த காடு போல் உள்ள செடி கொடிகளை அகற்றி உதவிட வேண்டும் என அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

