தமிழ்நாடு முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்களிடம் அச்சமும் கவலையும் ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், “நடப்பாண்டில் இதுவரை டெங்குவால் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நோயைத் தடுப்பது, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை உள்ளிட்டவை குறித்து மக்களிடம் அரசு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
