மதுபான கடைகள் மூடுவதற்கு பொதுமக்கள் வரவேற்பு. படிபடியாக மதுவை குறைக்க வேண்டும் என கோரிக்கை.
தமிழகம் முழுவதும் பள்ளி – கல்லூரிகள், கோவில் அருகில் உள்ள 717 மதுபான கடைகள் மூடப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இரண்டு மதுபான கடைகள், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் தலா இரண்டு கடைகள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 6 கடைகள் மூடப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மகிழ்ச்சியும்

வரவேற்பும் தெரிவித்துள்ளனர். பேருந்து நிலையம் அருகே கடைகள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் அருகில் கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். கடையில் குடித்துவிட்டு சண்டைகள் போடுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகினர். தற்போது இந்த கடைகள் மூடப்படுவதால் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோல் மது பயன்பாட்டை தமிழகத்திலிருந்து படிபடியாக குறைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
