Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி…கலெக்டர் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி இணைந்து நடத்திய தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று துவக்கி வைத்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை

வழங்கினார். உடன் மதுரை மண்டல இணை இயக்குநர் சந்திரன், திருச்சிராப்பள்ளி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மைய உதவி இயக்குநர் ரமேஷ்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகண்டன், வேல்முருகன், கல்லூரி முதல்வர் முனைவர் புவனேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!