புதுக்கோட்டை கோட்டாட்சியராக இருப்பவர் ஐஸ்வர்யா, இவர் இன்று காலை பணி நிமித்தமாக காரில் திருமயம் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் காமராஜ் ஓட்டினார். நமுணசமுத்திரம் அருகே சென்றபோது காருக்கு எதிரே அரசு பஸ்சும், பைக்கும் வந்தது.
பைக்கில் 2 வாலிபர்கள் இருந்தனர். அந்த பைக் அரசு பஸ்சை முந்திக்கொண்டு வந்து ஆர்டிஓ காரில் மோதியது- மோதிய வேகத்தில் பைக்கில் வந்த2 வாலிபர்களும் அந்த இடத்திலேயே இறந்தனர். இந்த விபத்தில் கார் டிரைவர் காமராஜ்க்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

